LYRIC

Yesuvin Siluvai Keezh Christian Song Lyrics in Tamil

1. இயேசுவின் சிலுவை கீழ்
வாஞ்சையோடே நிற்பேன்,
வனாந்தரத்தின் மத்தியில்
ஒதுங்கும் வீடதே;
வறண்ட பாழ் உலகிலே
கற்பாறை நிழலே,
பட்சிக்கும் நெருப்பு
மத்தியில் ஒதுங்கும் வீடதே.

2. இனிய புகலிடம்,
சந்தோஷ அரணே,
தேவன்பும் அவர் நீதியும்
சந்திக்கும் இடமே.
யாக்கோபு இளைப்பாறின
பெத்தேலின் ஏணிபோல்
என்னை விண்ணகம் சேர்க்கும் நல்
மீட்பர் சிலுவையே.

3. சிலுவையின் மறைவில்
காரிருள் மூடின
கல்லறையின் பேராழமே
நெஞ்சைக் கலக்குதே;
திடங்கொள், உந்தன் முன்னமே
உன் நேசர் கரங்கள்
விரித்து அரவணைக்கும்
காட்சி போல் வேறுண்டோ?

4. விஸ்வாசக்கண்களாலே
சிலுவை மீதிலே
தம் ஜீவன் விடும் நேசரை
அதோ, நான் காண்கிறேன்;
என் மீட்பர் அன்பின் மாட்சியும்
என் நீசக் கோலமும்
என்னுள்ளத்தை உருக்குதே
நெஞ்சைப் பிளக்குதே.

5. சிலுவையின் நிழலே
நான் தங்கும் இடமாம்,
அன்புள்ள நேசர் ஒளியே
என் பாதை காட்டிடும்;
உம் சிலுவை என் மேன்மையே,
மற்றேதும் நஷ்டமே;
உம்மை என்றும் பின் பற்றுவேன்,
விண்கரை சேர்வேன் நான்.

Yesuvin Siluvai Keezh Christian Song Lyrics in English

1. Yesuvin Siluvai Keezh
Vaanjaiyodae Ninrpean
Vanaatharathin Mathiyil
Othungum Veedathae
Varanda Paazh Ulagilae
Karpaarai Nilalilae
Patchikkum Neruppu
Maththiyil Othungum Veedathae

2. Iniya Pugalidam
Santhosha Aranae
Devanbym Avar Neethiyum
Santhikkum Idamae
Yakobu Ilaipaarina
Beththelin Yeanipoal
Ennai Vinnagam Searkkum Nal
Meetpar Siluvaiyae

3. Siluvaiyin Maraivil
Kaarirul Moodina
Kallaraiyin Pearaalamae
Nenjai Kalakkuthae
Thidankol Unthan Munnamae
Un Neasar Karangal
Virithu Aravanaikkum
Kaatchi Poal Vearundo

4. Viswasakankalaalae
Siluvai Meethilae
Tham Jeevan Vidum Neasari
Atho Naan Kaankirean
En Meetpar Anbin Maatchiyum
En Neesa Kolamum
Ennulaththai Urukkuthae
Nenjai Pilakkuthae

5. Siluvaiyin Nilalilae
Naan Thangum Idamaam
Anbulla Neasar Oliyae
En Paathai Kaatidum
Um Siluvai En Meanmaiyae
Mattethum Nastamae
Ummai Entrum Pin Pattruvean
Vinkarai Searvean Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvin Siluvai Keezh Christian Song Lyrics