Adaikalame Yesu Christian Song Lyrics

LYRIC

Adaikalame Yesu Christian Song Lyrics in Tamil

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!
திடனற்றுப் பெலனற்றுன்
அடியுற்றழும் ஏழைக்கு

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்!

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ?

Adaikalame Yesu Christian Song Lyrics in English

Ataikkalam Ataikkalamae Yesu Naathaa, Un
Ataikkalam Ataikkalamae!
Thidanattup Pelanattun
Atiyuttalum Aelaikku

1. Aasaiyodu Paavamathil Alainthu Thirinthaenae,
Anpulla Pithaa Unai Vittakantu Pirinthaenae;
Mosamathai Yaeyalaal Mattantaiyum Kaannaamalae
Thoshamodu Sernthanan Thuraththidaathu Serththarul!

2. Kattuppadaak Kaayamathin Ketta Ranam Polavae
Mattuppadaap Paavamathil Mayangi Uranginaen;
Kettavanae Povenak Kilaththinum Niyaayamae,
Kittivanthalarum Aelai Kenjuthal Kaelayyanae!

3. Sinthiya Uthiramathum Ainthu Thirukkaayamum
Nonthuru Kenathumanach Sanjalamakattidum;
Panthamikum Paavi Entan Kenjidung Karaththinai
Enthavithamun Thallaamal Irangidu Maiyanae!

4. Ennidaththil Varuvorai Enthavithamum Thallaen
Entu Sonna Vaakkathanil Enakkum Pangillaiyo
Antunathu Pakkamathil Aakiyiruntha Kallanukku
Intupara Theesiliruppaa Yenturaiththaa Yallavo?

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adaikalame Yesu Christian Song Lyrics