LYRIC

Tholugirom Engal Pithave Panigirom Aavi Christian Song in Tamil

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பணிகிறோம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1. துதிக்கிறோம் உம் தூய நாமம்
பணிகிறோம் உம் பரம பாதம்
ஜெபிக்கிறோம் உம் ஜெய நாமம்
தேவ தேவனே சரணம் சரணம்

2. தூய நாமம் நேய நாமம்
தேவ தேவ மேய நாமம்
தீயராம் எங்களையுமே
புத்ரராகிய தீர்த்த நாமம்

3. நன் நலன்கட்கோர் முதலே
நற்சேயை நீர் தந்ததாலே
நற்பிதாவே நாடி வந்தோம்
பொற்பாதமே தாள் பணிகிறோம்

4. உலகத்திலே அன்பு கூர்ந்து
உன் குமாரனை ஈந்த பிதாவே
உண்மையோடே ஸ்தோத்திரமே
உள்ளத்தோடு உயர் பிதாவே

5. அன்பின் உருவாம் அன்பின் பிதாவே
அன்பின் ஈவை அளித்த பிதாவே
அருள் மாரியின் ஆழிக்கடலே
அன்பினாலே பணிகின்றோமே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Tholugirom Engal Pithave Panigirom Aavi Lyrics