LYRIC

Maratha Anpin Magaththuvame Christian Song Lyrics in Tamil

மாறாத அன்பின் மகத்துவமே
தீராத இரக்கத்தின் திருவுருவே.
நீங்கா நிஜமே என் நேசமே
கருணையின் வடிவே
என் நிறைவே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

அறிவும் அழகும் அறியும் முன்னே தாயின் கருவினில் எனை தேர்ந்தவரே
பெயரும் புகழும் கிடைக்கும் முன்னே பெயர் சொல்லி அழைத்து உமதாக்கினீரே..
உம் அன்பு அளவிட முடியாதது
உம் பாசம் நிபந்தனை இல்லாதது
என்னோடு எந்நாளும் எனக்காக உடன் வாழும்
உன் அன்பு ஒன்றே மாறாதது
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

உறவும் நட்பும் உதறிடும் வேளை தோள் தந்து தேற்றிட வருபவர் நீரே
ஆறுதல் தேடி அலைந்திடும் போது மார்போடு என்னை அணைப்பவர் நீரே
உறுதியை சிறகாய் உவந்தளித்து
கழுகதன் இளமையை தருபவரே
இருளிலும் புயலிலும் துயரிலும் பிரியாத
உம் நட்பு ஒன்றே நிலையானது
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

Maratha Anpin Magaththuvame Christian Song Lyrics in English

Maratha anpin magaththuvame
Theeratha irakkaththin thiruvuruve
Neenga nijame en nesame
Karunaiyin vadive
En niraive
Aarathanai aarathanai aarathanai umakke

Arivum azhagum ariyum munne thayin karuvinil enai thernthavare
Peyarum pugazhum kidaikkum munne peyar solli azhaiththu umathakkineere
Um anpu alavida mudiyathathu
Um pasam nipanthanai illaathathu
Ennodu ennaalum enakaga udan vazhum
Un anpu ondre marathathu
Aarathanai aarathanai aarathanai umakke

Uravum natpum utharidum velai thol thanthu thetrida varupavar neere
Aruthal thedi alainthidum pothu marpodu ennai anaippavar neere
Uruthiyai siragaai uvanthaliththu
Kazhugathan ilaaiyai tharupavare
Irulilum puyalilum thuyarilum piriyatha
Um natpu ondre nilaiyaanathu
Aarathanai aarathanai aarathanai umakke

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maratha Anpin Magaththuvame