LYRIC

Thom Thom Christian Song Lyrics in Tamil

கர்த்தரை போற்றி பாடுங்கள்
இயேசுவை ஏற்றியே பாடுங்கள்
தேவாதி தேவன், இராஜாதி ராஜன்
வாழ்த்தியே பாடுங்கள்
இராஜாதி ராஜன் வருகிறார்
தேவாதி தேவன் வருகிறார்
இயேசு தேவன் மாறாத வேந்தன்
நீதியின் தேவனே

என் நீதியின் தேவனே வாரும்
எம் மக்களின் கண்ணீரை பாரும்
உம் மோட்ச ஒளி வீசி நின்று
இருளின் கண்கள் காண – கர்த்தரை போற்றி

தோம் தோம் தோம் தோம்
பணிந்தோம் புகழ்ந்தோம்
தோம் தோம் தோம் தோம்
துதித்தோம் மகிழ்ந்தோம்
தோம் தோம் தோம் தோம்
பணிந்தோம் புகழ்ந்தோம்
துதித்தோம் மகிழ்ந்தோம் தேவா

1. கர்த்தரின் நாமம் மேலான நாமம்
நாமங்களிலே உயர்ந்த நாமம்
தண்ணீர்களை கைபிடியாய் அளந்து பார்த்தவர்
வானங்களை ஜாண் அளவாய்
மண்ணை மரக்காலால் அளந்து
சுவாசத்தால் ஜலத்தை குவித்து
மலையை தராசில் நிறுத்தவர்
பரிசுத்தத்தில் மகத்துவம்
துதிகளிலே பயப்படவும்
கர்த்தரின் சுவாசம் கந்தக தீ போல்
எதிரியை கொழுத்திடும்

2. கர்த்தர் முன்பாக ஜாதிகள் எல்லாம்
தராசில் படியும் தூசு போல
ஒரு நாள் ஆயிரம் வருஷம் போல
ஆயிரம் ஒரு நாளாம்
பூமியை பார்க்க அது அதிரும்
பர்வதம் தொட அது புகையும்
கர்த்தரின் பிரசன்னம் பர்வதத்தை
மெழுகாய் உருக்கிடும்
கர்த்தரே இரட்சிப்பும் பெலனும்
அவரே நேசரின் கீதமும்
அனாதி தேவன் அவரைத் தவிர
தேவன் இல்லயே

3. சோர்வதில்லை அயர்வதில்லை
அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்
முழங்கால் யாவும் நாவுகள் யாவும்
முடங்கும் அறிக்கையிடும்
வானங்களை கையில் அளந்து
பூமியை திடப்படுத்தி
வானங்களை திரையாய் பரப்பி கூடாரமாக்கி
சிங்காசனம் வானமாம்
பாதபடி பூமியாம்
சேனைகளாய் அக்னி ஜுவாளையாய்
இராஜரீகமாய்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thom Thom Christian Song Lyrics