LYRIC

Sthothiram Yesu Natha Thuthi Christian Song in Tamil

ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே ஸ்தோத்திரம்
என் இதயம் உம்மையே சாரும்
ஏழையின் ஜெபம் கேளும்
அதுவே பேரின்பம்

1. அத்தி மரங்களெல்லாம் – ஒன்றாய்த் துளிர்விடா நேரம்
ஆட்டு மந்தையிலும் – இன்றும், முதல் இழந்தாலும்
ஆச்சரியமாய், நடத்துவீரே,
அற்புதரே தேடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்

2. நியாயம் இழந்தாலும் – நீரே நீதி செய்திடுவீர்
காயம் ஆறிடவே எந்தன் சகாயரானீரே
ஆற்றிடுவீர், போற்றிடுவேன்
ஆதி அன்பை நாடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்

3. அந்தகாரமதில் – எந்தன் நிந்தை மாற்றிடுவீர்
எந்த வேலையிலும் – இரட்சகர், எந்தன் கரம் பிடிப்பீர்
உந்தன் கிருபை தந்தருள்வீர்
வந்தேன் நாடி இந்த வேளை
ஏழையின் ஜெபம் கேளும்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sthothiram Yesu Natha Thuthi Lyrics