LYRIC

Kanneerin Pallathakkil Christian Song Lyrics in Tamil

1. கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட வேளைகளில்
தோள் மீதில் சுமந்து வந்த எந்தன் நேசரே (2)
சோர்வின் மத்தியிலே துவண்டிட்ட வேளைகளில்
தட்டிக்கொடுத்து என்னை தூக்கின தெய்வமே (2)

இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்

2. மனிதர்கள் வேண்டாமென்று என்னை தூக்கி எறிந்தாலும்
உமக்கு வேண்டுமென்று சேர்த்துகொண்ட தெய்வமே (2)
கண்ணின் மணி போல கண்ணுக்குள்ளே என்னை வைத்து
காப்பாற்றி வளர்த்து வந்த அன்பு நேசரே (2)

3. பாடுகள் தான் வாழ்க்கையென்று கலங்கின நேரங்களில்
என் கிருபை போதுமென்று தேற்றின தெய்வமே (2)
கண்ணீர் தான் மிச்சமென்று சோர்ந்திட்ட வேளைகளில்
சந்தோஷம் தந்து என்னை அணைத்திட்ட நேசரே (2)

4. சாவின் துக்கங்களில் உறவின் பிரிவுகளில்
அரணாய் வந்து என்னை சூழ்ந்திட்ட தெய்வமே -2
தனிமையின் நேரங்களில் உலகத்தின் வெறுமைகளில்
அபிஷேகம் தந்து என்னை நிரப்பிட்ட நேசரே (2)

5. வழியே இல்லையென்று கலங்கின நேரங்களில்
ஒளியாய் வந்து என்னை நடத்தின தெய்வமே (2)
அலை போல் துன்பம் என்னை நெருக்கின வேளைகளில்
மலை போல் வந்து அதை தடுத்திட்ட நேசரே (2)

Kanneerin Pallathakkil Christian Song Lyrics in English

1. Kanneerin Palathaakkil Nadanthitta Velaigalil
Tholmeethil Sumandhuvandha Endhan Nesare (2)
Sorvin Mathiyile Thuvanditta Velaigalil
Thattikoduthu Ennai Thookkina Dheivame (2)

Yesappa Ummai Paaduven
Endhan Thagappane Ummai Uyarthuven
Endhan Yesappa Ummai Paaduven
Endhan Thagappane Ummai Uyarthuven

2. Manithargal Vendaam Endru Ennai Thooki Erindhaalum
Umakku Vendum Endru Serthukonda Dheivame (2)
Kanninimani Pola Kannukkulle Ennai Vaithu
Kaappaatri Valarthu Vandha Anbu Nesare (2)

3. Paadugal Thaan Vaazhkkai Endru Kalangina Nerangalil
En Kirubai Pothum Endru Thettrina Dheivame(2)
Kanneerthaan Micham Endru Sorndhitta Velaigalil
Santhosham Thandhu Ennai Anaithitta Nesare (2)

4. Saavin Thukkangalil Uravin Pirivugalil
Aranaai Vandhu Ennai Soozhndhitta Dheivame (2)
Thanimaiyin Nerangalil Ulagathin Verumaigalil
Abishegam Thandhu Ennai Nirappitta Nesare (2)

5. Vazhiye Illai Endru Kalangina Nerangalil
Vazhiyaai Vandhu Ennai Nadathina Dheivame (2)
Alai Pol Thunbam Ennai Nerukkina Velaigalil
Malai Pol Vandhu Athai Thaduthitta Nesare (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanneerin Pallathakkil Christian Song Lyrics