LYRIC

Balapaduthum Devan Christian Song Lyrics in Tamil

பலவீனன் என்று சொல்லாயாக பலப்படுத்தும் தேவன் உன்னோடு
கனவீனன் என்று சொல்லாயாக கனப்படுத்தும் தேவன் உன்னோடு

1. கோலியாத்தின் கோஷம் பெருகினதே
இஸ்ரவேல் ராஜா கலங்கினானே
சிறியவன் தாவீதை கொண்டு
பெரிதான இரட்சிப்பை கர்த்தர் கொடுத்தார்

கலங்கிடாதே திகைத்திடாதே
கன்மலை திறந்து தண்ணீரை கொடுத்த
பராக்கிரம தெய்வமே நம் பக்கம்

2. யோர்தான் கரை புரண்டோடிடவே
இஸ்ரவேல் கூட்டத்தார் புறப்பட்டனர்
தண்ணீரை குவியலாய் சேர்த்து
நடுப்பாதை உண்டாக்கி கர்த்தர் நடத்தினார்

பயந்திடாதே ஓய்ந்திடாதே
எரிகோவின் மதிலை விழுந்திடச் செய்த
அற்புத தேவனே நம்மோடு

3. மீதியானிய சேனை நெருங்கிட்டதே
கிதியோனின் படைகள் முன் சென்றதே
எக்காளங்கள் ஊதி பானைகள் உடைத்து
கர்த்தரால் ஜெயத்தை பெற்றனரே

சோர்ந்திடாதே தயங்கிடாதே
கேரீத்தின் தண்ணீர் வற்றின போதும்
தாகம் தீர்த்த கர்த்தர் நம்மோடு

4. எமோரிய ராஜாக்கள் எதிர்த்தனரே
யோசுவாவின் படைகள் எதிர்கொண்டன
கிபியோன் மேல் சூரியனையும் ஆயலோன் மேல் சந்திரனையும்
நிறுத்தி ஜெயம் கொடுத்த தேவன் நம்மோடு

மனமுடைந்திடாதே பின்வாங்கிடாதே
யேசபேலின் அக்கிரமத்தை முழுவதுமாய் சங்கரிக்க
யெகூவை அபிஷேகித்த கர்த்தர் நம்மோடு

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Balapaduthum Devan Christian Song Lyrics