LYRIC

Singasanathil Christian Song Lyrics in Tamil

சிங்காசனத்தில் வீற்றாளும்
ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே (2)

துதியும் கனமும் மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும் பெலனும் ஐஸ்வரியமும் (2)
எந்நாளும் உம் ஒருவருக்கே
எல்-எலியோன் உம் ஒருவருக்கே (2)

ஆராதனை ஆராதனை
ஆட்டுக்குட்டி ஆராதனை
ஆராதனை ஆராதனை
அல்பா ஒமேகாவுமானவரே

1. கோடான கோடி பரம சேனை
தொழுதிடும் எங்கள் தூயவரே
பரிசுத்தனாக்கி உமக்கு முன்
துதிகள் பாட நிறுத்தினீரே (2) – துதியும்….

2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை புகழ்ந்திடுவோம்
ஆவியோடும் உண்மையோடும்
முழு மனதாய் துதித்திடுவோம் (2) – துதியும்….

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Singasanathil Song Lyrics