LYRIC

Idhaya Thudipu Christian Song Lyrics in Tamil

உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !

நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !

உலக அன்பெல்லாம் – மறையும்
கானல் நீர் தானே
மறைந்ததும் இதயம் – உறையும்
வலியை உணர்ந்தேனே !

ஜீவத்தண்ணீர் உம்மில் கண்டு
தாகம் தீர்த்தேனே
நீரைக் கண்ட மானைப்போல
மகிழ்ந்து நின்றேனே !

எனது ஜீவன் இயேசு நீர்தானே

உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !

கண்ணில் நீர் வழியும் – தருனம்
துடைத்து அணைத்தீரே
கால்கள் சருக்கும்போது – கிருபை
தாங்கி நடத்தியதே
கைகள் கோர்த்து நடக்கும்போது
வாழ்வு இனிக்கிறதே
வாழும் காலம் யாவும் உமது
உறவில் நிலைத்திடுவேன்
எனது உறவும் ஏசு நீர்தானே!

உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !

நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !

உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !!

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Idhaya Thudipu Christian Song Lyrics