LYRIC

Uyara Parandhiduvaai song lyrics – John Jebaraj & Paul Dhinakaran

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்-2
பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே-2

நீ மேலே எழும்பிடுவாய்
மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப்
பலனை அனுபவிப்பாய்-2

நீ இழந்ததை இரட்டிப்பாக
சுதந்தரித்திடுவாய்-2

1.உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம்
இன்றோடு அவிழ்ந்திடும்
முன்னேற தடையாய் நிற்கும்
சங்கிலிகள் அறுந்திடும்-2

உனக்குரிய தரிசனம்
நிறைவேற துவங்கிடும்
அனுகூல வாசல்கள்
உனக்காக திறந்திடும்-2-நீ மேலே

2. நீதியின் சூரியன்
உன்மீது உதித்திடுவார்
இயேசு தம் செட்டையின் கீழ்
ஆரோக்கியம் தந்திடுவார்-2

துன்மார்கன் உன்காலின்
சாம்பலாய் மாறிடுவான்
மின்னலைப்போலவே
சத்துரு விழுந்திடுவான்-2-நீ மேலே

 

2024 Blessing song lyrics – John Jebaraj and Paul Dhinakaran.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *