LYRIC

Ippothaan Aarambamae song lyrics

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும்-2
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது-2

இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே அற்புதமே

1.வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும்-2
வானம் பூமி ஒழிந்தாலும்
வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை
நிறைவாய் முடிப்பாரே-இப்பதான்

2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும் இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும்-2
காலை வந்ததால்
சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி-இயேசு
மகிழச் செய்வாரே-இப்பதான்

புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே-4

இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே-4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *