LYRIC

Padharadhae Lyrics in Tamil

மலையாய் எழும்பும் சவாலோ அரை கூவும் ஒரு கோலியாத்தோ கண்மலையாம் தேவ நாமம் உண்டு உன் எதிரியைக் கீழப்படுத்த -2

பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம்

1. அலையலையாய் வரும் சோதனையோ தலைமேல் புரண்டு ஓடுதோ கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு உன் கஷ்டத்தை மறைய செய்ய -2

பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம்

2. ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ -2
கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே முன்னேற வழிகள் திறப்பாரே -2

பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *