LYRIC
சித்தம் உம் சித்தம் song lyrics in Tamil
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்லை அது மாறுவதில்ல
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பதேயில்ல அது மறந்ததில்லை-2
நான் போகும் பாதைகள்
முரண்பாடாயிருந்தாலும்
இலக்கிற்கு தடையே இல்ல
திட்டத்தின் மையத்தில்
நீர் என்னை வைத்ததால்
சறுக்கில்லை முன்னே செல்ல-சித்தம்
1.யாக்கோபைப்போல எத்தனாக வாழ்ந்ததும்
யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும்-2
வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர்
வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர்
திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
உமது திட்டங்கள் தோற்பதில்லை-சித்தம்
2.மோசேயைப்போல எகிப்திலே இருந்ததும்
தானியேலைப்போல பாபிலோனில் வளர்ந்ததும்-2
வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்ந்திட
உமது தரிசனங்கள் தோற்பதில்லை-சித்தம்
சித்தம் உம் சித்தம் song lyrics in English
Siththam Um Siththam
Adhu Oru Pothum Maaraadhu
Maatramey Illai Adhu Maaruvadhu Illa
Saththam Um Saththam
Um Siththathai Ninaipootta
Marappadhey Illa Adhu Marandhadhu Illa (2)
Naan Pogum Paathaigal
Muranpaadaai Irundhaalum
Ilakirkku Thadaiye Illa
Thittathin Maiyathil
Neer Ennai Vaithadhalaal
Sarukkillai Munne Sella – Siththam
1. Yaakobai Pola Eththanaaga Vaazhnthadhum
Yoseppai Pola Kuzhiyile Veezhndhadum (2)
Vaazhnthavar Veezhndhaalum Kaiyil Eduppir
Veezhndhavar Vaazhnthadhaga Maatri Amaippir
Thittam Vaithire Ennai Israavelai Maatrida
Siththam Kondire Ennai Ariyanaial Etrida
Umadhu Thittangal Thorpathillai – Siththam
2. Mosaiyai Pola Egipthile Irundhadum
Dhaniyelai Pola Baabilonil Valarnthadhum (2)
Valarnthadhin Kaaranam Arindhu Konden
Valarththavar Yaar Endrum Purindhu Konden
Thittam Vaithire Ennaal Israavelai Meetrida
Siththam Kondire Ennaal Um Naamam Uyarnthida
Umadhu Tharisanangal Thorpathillai – Siththam
No comments yet