LYRIC

En idhayam Neer thangum lyrics by Praiselin Stephen

என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும் -2
உம்மை நேசிக்கிறேன் -4
என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2

என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும்

என் இதய பலகையிலே
உம் சித்தம் எழுதனுமே
உமது வார்த்தையிலே
உம் சித்தம் விளங்கிடுதே
என் இதய பலகையிலே
உம் சித்தம் எழுதனுமே
உமது பிரமாணத்திலே
உம் சித்தம் விளங்கிடுதே
என் இதயம் முழுதும் என்றும் உமக்காய்
உடன்படிக்கை செய்தேன்….
உடன்படிக்கை செய்தேன்

என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும்

கல்லான சிலைகளுக்குள்
நீர் என்றும் இருப்பதில்லை
கல்லான இதயத்திலே
நீர் என்றும் இருப்பதில்லை- 2
கல்லான என் இதயம் சதையாக
மாற்றினீர் மகிமையின் ஸ்தலமானதே…
மகிமையின் ஸ்தலமானதே

உம் வசனங்கள் எல்லாம் எனதாக வேண்டும்
என் இதயம் முழுதும் உமதாக வேண்டும் – 2

உம்மை நேசிக்கிறேன் -4
என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2

என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும் -2

என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *