LYRIC

பாமாலை 156 – இவ்வுயர் மலை மீதினில் Pamalai 156 Lyrics

1. இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதா, உந்தன் பாதத்தில்
எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம் தாசர் பூர்வ பக்தராம்;
சீனாய் மலைமேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
தீ, காற்று, கம்பம் கண்டோனை
மா மென்மை சத்தம் கேட்டோனை.

2. இவ்வுயர் மலை மீதிலே
எம் நாதர் சீஷர் மூவரே;
கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்
‘அன்பே கடவுள்’ போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்.

3. இவ்வுயர் மலைமீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
பரமன் ஜோதி தோன்றிடும்.
பகலோன் ஜோதிமாய்த்திடும்;
மா தூய ஆடை வெண்மையே,
ஆ மாந்தர் காணா விந்தையே!
நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே.

4. இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்,
மா இருள் மேகம் மூடினும்,
மா ஜோதி பார்வை வாட்டினும்,
காண்போமே தெய்வ மைந்தனை,
கேட்போமே தெய்வ வார்த்தையை.
‘இவர் என் நேச மைந்தனார்!
இவர்க்குச் செவிகொடுப்பீர்.’

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *