LYRIC

பாமாலை 86 – விடியற்காலத்து வெள்ளியே Pamalai 86 Lyrics

1. விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நக்‌ஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2. தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3. ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4. எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.

5. விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நக்‌ஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

1. Vitiyarkaalaththu Velliyae, Thoenri
Kaar Irul Neenkath Thunaipurivaay;
Uthaya Nak‌shaththiramae, Oli Kaatti
Paalaka Meetparpaal Saerththituvaay.

2. Than Panith Thulikal Ilankum Poethu,
Munnanaiyil Avar Thuunkukinraar;
Vaenthar, Sirushtikar, Nal Meetpar Enru
Thuutharkal Vanankip Paatukinraar.

3. Aethoemin Sukantham, Katalin Muththu,
Malaiyin Maanikkam Ussithamoe?
Narsoelaiyin Vellaippoelam Etuththu
Thankamutan Pataiththal Thakumoe?

4. Eththanai Kaanikkaithaan Aliththaalum,
Meetpar Kataasasham Peral Arithae;
Negnsin Thuthiyae Nal Kaanikkaiyaakum;
Aezhaiyin Jepam Avarkkarumai.

5. Vitiyarkaalaththu Velliyae, Thoenri
Kaar Irul Neenkath Thunaipurivaay;
Uthaya Nak‌shaththiramae, Oli Kaatti
Paalaka Meetparpaal Saerththituvaay.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *