LYRIC

Pullai Pol Ularnthidum Song Lyrics in Tamil

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை – 2
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை – 2

1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்
மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லை
கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை
கண்கள் காண்பதின்றி பெலன் இல்லை

போதும் என்கிற மனதுடனே
தேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம் – 2
நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்
இயேசுவை அனுதினம் தேடிடுவோம் – 2

2 மாயை மாயை தான் எல்லாம் மாயை தான்
மாய லோகமாய் இவ்வுலகில்
நேற்று வாழ்ந்தவர் இன்று இல்லையே
நாளை நடப்பதை நாம் அறியோம்

நாளை என்பது நமது அல்ல
நமது ஜீவன் நம் கையில் அல்ல – 2
நல்வராம் நம் இயேசுவிடம்
நமது வாழ்வினைக் கொடுத்திடுவோம் – 2

3.உலகம் அனைத்தையும் சொந்தமாக்கியும்
நமது ஜீவனை நாம் இழந்தால்
லாபம் ஏதும் இல்லை மேன்மை ஒன்றும் இல்லை
வாழ்ந்த வாழ்க்கையால் பயன் இல்லை

அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராய்
(நம்) இயேசு ஒருவரே இரட்சகராய் – 2
வழியாய் ஒளியாய் வந்தவரை
உள்ளத்தில் ஏற்றிட உறுதிகொள்வோம் – 2

 

Pullai Pol Ularnthidum Song Lyrics in English

Pullai Pol Ularthidum Vazhgai
Puvai Pol Maraithidum Vazhgai – 2
Puvi Vazhvin Menmaigal Ondrum Illai
Nillayana Vazhvu Engey Illai – 2

1. Pirakum Pothum Eirakum Pothum
Manithan Karangalil Ondrum Illai
Kondu Vanthathillai Kondu Povathillai
Kangal Kanbathandri Palan Illai

Podhum Engira Manathudanae
Deva Bakthiyai Valldhiduvom – 2
Nithiya Vallvinai Nokiduvom
Yeasuvai Anudhinam Theadiduvom – 2

2. Mayai Mayaidhan Ellam Mayaidhan
Maya Logamai Ivulagil
Naetru Vallndhavan Indru Illaiyea
Nallai Nadapathai Naam Arivom

Nallai Enbathu Namadhu Alla
Namadhu Jeevan Num Kaiyel Alla – 2
Nallavaraam Num Yeasuvidum
Namadhu Vallvinai Koduthiduvom – 2

3. Ulagam Anaithaiyum Sondhamakiyum
Namadhu Jeevanai Naam Ilandhal
Laabaum Eadhum Illai Maenmai Ondrum Illai
Vaalndha Vaalkaiyal Baiyen Illai

Agilum Anaithirkum Aandavarai
(Num)Yeasu Oruvarae Eratchagarai – 2
Valiyai Oliyai Vandhavarai
Ullathil Yeatrida Uridhi Kolvom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *