பாமாலை 145 – விண்போகும் பாதை Pamalai 145 Lyrics

பாமாலை 145 – விண்போகும் பாதை Pamalai 145 Lyrics 1. விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் எண்ணுவோம்; பகைஞரின் கொடூரமாம் வன்மையை உணர்வோம். 2. ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் இம்மையில் கூடாதே. 3. சிற்றின்பத்தை வெறுத்தலும், உள்ளத்தை முற்றும் நாம் கர்த்தாவுக் கொப்புவித்தலும் அரிதென் றெண்ணலாம். 4. ஆனாலோ, பாவம் நீக்கிட அகோர வேதனை மீட்பர் அடைந்து மாண்டதும் நாம் காணக்கூடாதே. 5. பக்தன் […]

பாமாலை 144 – கொந்தளிக்கும் லோக Pamalai 144 lyrics

பாமாலை 144 – கொந்தளிக்கும் லோக Pamalai 144 lyrics 1. கொந்தளிக்கும் லோக வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை நித்தம் நித்தம் மா அன்போடு ‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் அந்த சத்தமே வீடு, வேலை, இனம் யாவும் விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வை விட்டு நீங்க அழைப்பார் பற்று பாசம் யாவும் தள்ளி ‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், […]

பாமாலை 143 – வானமும் பூமியும் Pamalai 143 Lyrics

பாமாலை 143 – வானமும் பூமியும் Pamalai 143 Lyrics 1. வானமும் பூமியும் சமஸ்த அண்டமும் படைத்த நீர் வேதத்தின் ஒளியை பரப்பி, இருளை அகற்றி, செங்கோலை செலுத்துவீர். 2. மீட்பை உண்டாக்கவும் மாந்தரைக் காக்கவும் பிறந்த நீர் பாவத்தை அழித்து சாத்தானை மிதித்து, மாந்தரை ரட்சித்து நடத்துவீர். 3. பாவியின் நெஞ்சத்தை திருப்பி ஜீவனை கொடுக்கும் நீர் சபையை முழுதும் திருத்தித் தேற்றவும் ஏகமாய்ச் சேர்க்கவும் அருளுவீர். 4. ஞானம் நிறைந்தவர் அன்பு மிகுந்தவர் […]

பாமாலை 142 – பிதாவே மா தயாபரா Pamalai 142 Lyrics

பாமாலை 142 – பிதாவே மா தயாபரா Pamalai 142 Lyrics 1. பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே, சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன். […]

பாமாலை 141 – தெய்வன்புக்காக உன்னத Pamalai 141 lyrics

பாமாலை 141 – தெய்வன்புக்காக உன்னத Pamalai 141 lyrics 1. தெய்வன்புக்காக உன்னத கர்த்தாவுக்குப் புகழ்ச்சி; என் பாவக்கேட்டை நீக்கின அருள் மகா திரட்சி; மெய்ச் சமாதானம், என்றைக்கும் மானிடர்மேல் பிரியமும் உண்டாம் இரக்கம் பெற்றோம். 2. மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே, துதியோடும்மைக் கும்பிட பணிகிறோம், கர்த்தாவே, அளவில்லாப் பலமாய் நீர் நினைத்த யாவும் செய்கிறீர்; மா பாக்கியர் அடியார். 3. ஆ, இயேசு, தெய்வ மைந்தனே; கடன்களைச் செலுத்தி கெட்டோரை மீட்ட மீட்பரே, […]

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே Pamalai 140 Lyrics

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே Pamalai 140 Lyrics 1. பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார் தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார் 2. விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேருவார் எத்தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார் 3. அமர்ந்த மென்மை சத்தத்தை போல் நெஞ்சில் பேசுவார் வீண்பயம் நீக்கிக் குணத்தை சீராக்குவார் 4. நற்சிந்தை தூய விருப்பம் தீயோன் மேல் வெற்றியும் எல்லாம் அவரால் மாத்திரம் உண்டாகி விடும் 5. ஆ நேச தூய ஆவியே உம் பெலன் […]

பாமாலை 139 – தெய்வாவி மனவாசராய் Pamalai 139 Lyrics

பாமாலை 139 – தெய்வாவி மனவாசராய் Pamalai 139 Lyrics 1. தெய்வாவி, மனவாசராய், வந்தனல் மூட்டுவீர்; உம் அடியாரின் உள்ளத்தில் மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து, நிர்ப்பந்த ஸ்திதியும் என் கேடும் காட்டி, ஜீவனாம் மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே, துர் ஆசை சிந்தையும் தீக் குணமும் சுட்டெரிப்பீர், பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும் இவ்வேற்ற நேரத்தில்; செழிப்புண்டாகச் செய்திடும் பாழான நிலத்தில். 5. […]

பாமாலை 138 – தெய்வ ஆவியே Pamalai 138 Lyrics

பாமாலை 138 – தெய்வ ஆவியே Pamalai 138 Lyrics 1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர், சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர். […]

பாமாலை 137 – கர்த்தாவின் சுத்த ஆவியே Pamalai 137 Lyrics

பாமாலை 137 – கர்த்தாவின் சுத்த ஆவியே Pamalai 137 Lyrics 1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும். 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால் இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக, நல்ல, […]

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே Pamalai 136 Lyrics

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே Pamalai 136 Lyrics 1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா! இந்தப் பூதலத்திலே அல்லேலூயா! கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா! பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா! 2. வான ஆசனத்திலே அல்லேலூயா! வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா! துதி பெறும் தேவரீர் அல்லேலூயா! பூதலத்தை மறவீர், அல்லேலூயா! 3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா! திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா! திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா! மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா! 4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா! […]