பாமாலை 153 – ஓர்முறை விட்டு மும்முறை Pamalai 153 Lyrics 1. ஓர் முறை விட்டு மும்முறை சீமோன் மறுத்தும் ஆண்டவர் என்னிலே அன்புண்டா? என்றே உயிர்த்தபின் கேட்டனர். 2. விஸ்வாசமின்றிக் கர்த்தரை பன்முறை நாமும் மறுத்தோம்; பயத்தினால் பலமுறை நம் நேசரை விட்டோம். 3. சீமோனோ சேவல் கூவுங்கால் மனம் கசந்து அழுதான் பாறை போல் நின்று பாசத்தால் கர்த்தாவைச் சேவித்தான். 4. அவன் போல் அச்சங் கொள்ளினும், நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்; பாவத்தால் […]
பாமாலை 152 – கர்த்தர் சமீபமாம் Pamalai 152 Lyrics
பாமாலை 152 – கர்த்தர் சமீபமாம் Pamalai 152 Lyrics 1. கர்த்தர் சமீபமாம் என்றே யோர்தான் நதியின் அருகே, முன் தூதன் யோவான் கூறிடும் நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார் நம் நெஞ்சில் வந்து தங்குவார் அவர்க்கு வழி ஆகவும் அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும், ரட்சிப்பும், ஜீவ கிரீடமும் உம் அருள் அற்ற யாவரும் உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும் […]
பாமாலை 151 – ஆறுதலின் மகனாம் Pamalai 151 Lyrics
பாமாலை 151 – ஆறுதலின் மகனாம் Pamalai 151 Lyrics 1. ‘ஆறுதலின் மகனாம்’ என்னும் நாமம் பெற்றோனாம் பக்தன் செய்கை வாக்கிலே திவ்விய ஒளி வீசிற்றே. 2. தெய்வ அருள் பெற்றவன் மா சந்தோஷம் கொண்டனன்; வார்த்தை கேட்டநேகரும் சேர்ந்தார் கர்த்தர் அண்டையும். 3. பவுல் பர்னபாவையும் ஊழியத்திற்கழைத்தும் வல்ல ஞான வரத்தை ஈந்தீர், தூய ஆவியே. 4. கிறிஸ்து வலப் பக்கமாய் நாங்களும் மாசற்றோராய் நிற்க எங்கள் நெஞ்சையும் தேவரீரே நிரப்பும்.
பாமாலை 150 – காரிருள் பாவம் மூடியே Pamalai 150 Lyrics
பாமாலை 150 – காரிருள் பாவம் மூடியே Pamalai 150 Lyrics 1. காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் 2. ஒன்றான திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் வந்து போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் ரத்தத்தால் சம்பாதித்தார் 3. முற்காலம் தூயோன் பிலிப்பு காணாததை நாம் உணர்ந்தோம் கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு மேலான ஞானம் அடைந்தோம் 4. நற்செய்கையில் நிலைப்போர்க்கே வாடாத கீரிடம் என்றுதான் விஸ்வாசிகள் கைக்கொள்ளவே […]
பாமாலை 149 – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Pamalai 149 Lyrics
பாமாலை 149 – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Pamalai 149 Lyrics 1. கிறிஸ்துவின் சுவிசேஷகர் நற்செய்தி கூறினார் யாவர்க்கும் திவ்விய ரகசியம் விளங்கக் காட்டினார். 2. பூர்வீக ஞானர் மங்கலாய் அறிந்த வாக்கையே கார்மேகம் இல்லாப் பகல்போல் இவர்கள் கண்டாரே. 3. மெய் மாந்தனான கர்த்தரின் மகா செய்கை எல்லாம் உரைக்கும் திவ்விய வசனம் சாகாமை உள்ளதாம். 4. நால் சுவிசேஷகரையும் ஓர் ஆவி ஏவினார் தம் வேதத்தாலே நம்மையும் இப்போதழைக்கிறார். 5. நீர் பரிசுத்த மார்க்குவால் […]
பாமாலை 148 – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Pamalai 148 Lyrics
பாமாலை 148 – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Pamalai 148 Lyrics 1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. 2. பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவான்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். 3. கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும். […]
பாமாலை 147 – உன் வாசல் திற Pamalai 147 Lyrics
பாமாலை 147 – உன் வாசல் திற Pamalai 147 Lyrics 1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே தூய தாய் மரியாள் ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான் காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரை அன்னாள் சிமியோனும் கண்ணுற்ற சாட்சி […]
பாமாலை 146 – மேய்ப்பரை வெட்ட Pamalai 146 Lyrics
பாமாலை 146 – மேய்ப்பரை வெட்ட Pamalai 146 Lyrics 1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய் ஆட்டைப் பட்சிக்கவே, சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே. 2. சவுல் சீஷரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான்! விண் ஜோதி க்ஷணம் கண்டு தரையில் விழுந்தான். 3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’ என்றே காதுற்றதும், ‘கர்த்தாவே, யாது செய்வேன்?’ என்றான் நடுங்கியும். 4. கிறிஸ்துவின் சத்துரு நல்ல போர்ச்சேவகனானான் கொல் ஓநாய்போன்றோன் ஆட்டு குட்டிக்கொப்பாயினான். 5. நல் மேய்ப்பர் இயேசு […]
பாமாலை 145 – விண்போகும் பாதை Pamalai 145 Lyrics
பாமாலை 145 – விண்போகும் பாதை Pamalai 145 Lyrics 1. விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் எண்ணுவோம்; பகைஞரின் கொடூரமாம் வன்மையை உணர்வோம். 2. ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் இம்மையில் கூடாதே. 3. சிற்றின்பத்தை வெறுத்தலும், உள்ளத்தை முற்றும் நாம் கர்த்தாவுக் கொப்புவித்தலும் அரிதென் றெண்ணலாம். 4. ஆனாலோ, பாவம் நீக்கிட அகோர வேதனை மீட்பர் அடைந்து மாண்டதும் நாம் காணக்கூடாதே. 5. பக்தன் […]
பாமாலை 144 – கொந்தளிக்கும் லோக Pamalai 144 lyrics
பாமாலை 144 – கொந்தளிக்கும் லோக Pamalai 144 lyrics 1. கொந்தளிக்கும் லோக வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை நித்தம் நித்தம் மா அன்போடு ‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் அந்த சத்தமே வீடு, வேலை, இனம் யாவும் விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வை விட்டு நீங்க அழைப்பார் பற்று பாசம் யாவும் தள்ளி ‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், […]