பாமாலை 123 – அல்லேலூயா இப்போது போர் Pamalai 123 Lyrics அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! 1. இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார் பாதாள சேனையை வென்றார் நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார் அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே! களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர் அல்லேலூயா! Allaeluuyaa! […]
பாமாலை 122 – அல்லேலூயா ஆ மாந்தரே Pamalai 122 Lyrics
பாமாலை 122 – அல்லேலூயா ஆ மாந்தரே Pamalai 122 Lyrics 1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண் மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2. அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. 3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்; வெண் ஆடை தூதன் சொல்லுவான்: நாதர் கலிலேயா செல்வார். 4. பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே! […]
பாமாலை 121 – இப்போது நேச நாதா Pamalai 121 Lyrics
பாமாலை 121 – இப்போது நேச நாதா Pamalai 121 Lyrics 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, […]
பாமாலை 120 பூரண வாழ்க்கையே Pamalai 120 Lyrics
பாமாலை 120 பூரண வாழ்க்கையே Pamalai 120 Lyrics 1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே; உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார்; நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. […]
பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய் Pamalai 119 Lyrics
பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய் Pamalai 119 Lyrics 1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய் இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும், மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்; என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும் என்னால் உற்றீர், பேர் அன்பரே; என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே. 1. […]
பாமாலை 118 – துயருற்ற வேந்தரே Pamalai 118 Lyrics
பாமாலை 118 – துயருற்ற வேந்தரே Pamalai 118 Lyrics 1. துயருற்ற வேந்தரே, சிலுவை ஆசனரே, நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய், துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார், அபிஷேக நாதனார், ‘தேவனே, என் தேவனே, எந்தனை ஏன் கைவிட்டீர்?’ என்றுரைக்கும் வாசகம் கேள், இருண்ட […]
பாமாலை 117 – சிலுவையைப் பற்றி Pamalai 117 Lyrics
பாமாலை 117 – சிலுவையைப் பற்றி நின்று Pamalai 117 Lyrics 1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று, விம்மிப் பொங்கினார் ஈன்றாள்; தெய்வ மாதா மயங்கினார்; சஞ்சலத்தால் கலங்கினார்; பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார் சிலுவையை நோக்கிப் பார்த்தார்; அந்தோ, என்ன வேதனை! ஏக புத்திரனிழந்து, துக்க சாகரத்தில் ஆழ்ந்து, சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்ற அன்னை அருந்துயருற யாவரும் உருகாரோ? தெய்வ மைந்தன் தாயார் இந்த துக்க […]
பாமாலை 116 – உம் ராஜ்யம் வருங்காலை Pamalai 116 Lyrics
பாமாலை 116 – உம் ராஜ்யம் வருங்காலை Pamalai 116 Lyrics 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே; தம் பெலனற்ற கையை நீட்டினார்; முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன் மெய்யாய் நீ […]
பாமாலை 115 – கூர் ஆணி தேகம் Pamalai 115 Lyrics
பாமாலை 115 – கூர் ஆணி தேகம் Pamalai 115 Lyrics 1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே நானும் கூர் ஆணியை. 5. உம் […]
பாமாலை 114 – வாதையுற்ற மீட்பரே Pamalai 114 Lyrics
பாமாலை 114 – வாதையுற்ற மீட்பரே Pamalai 114 Lyrics 1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் […]